விருதுகள்

“ஆற்றல் மிகு பெண்கள்” விருது

FETNA Women Achievers Award

July 10, 2023

நன்றி செலுத்தும் நேரம்!

கடந்த வாரம் 65 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான, FeTNA என்று அழைக்கப்படும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை “ஆற்றல் மிகு பெண்கள்” என்ற விருதிற்காக என்னையும் ஒருவளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற செய்தி எனக்கு வியப்பை அளித்தது. அந்த விருதிற்காக எனது அட்லாண்டாத் தமிழ்ச் சங்கம் எனது பெயரைப் பரிந்துரை செய்தார்கள் என்று கேட்டபோது எனக்குள் ஓர் இனம் புரியாத நம்பிக்கை துளிர்த்தது.

தமிழுக்காகவும், மனிதத்திற்காகவும் தன்னலமின்றி உழைக்கும் அனைத்து மகளிருக்கும் மற்றும் எனது அன்பு அடுத்தத் தலைமுறை குழந்தைகளுக்கும் இந்த விருதினை நான் பகிர்ந்தளிக்கிறேன்.

இந்தச் சிறியவளின் நன்றியைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளட்டும்.

அனைவருக்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻