ஏப்ரல் 20, 2024

அனைவருக்கும் வணக்கம்,

ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா பேரூரில் உள்ள பீச்ட்ரீ பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 20,2024 ஆம் நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துள்ள பள்ளி முதல்வர் ருக்மாங்கதன் அவர்களுக்கும் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்கு இடையே தொய்வின்றி தன்னார்வலர் பணி செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பணிவான வணக்கம்.

“பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்!

இந்நாள் தொண்டுசெய்வாய்!

தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே!

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெல்லாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! . .

இளந்தமிழா அறஞ்செய்வாய்! “

என்ற புரட்சிக்கவியின் வரிகளுக்கு ஒப்ப துடிப்புடன் கண்துஞ்சாது தமிழ்ப்பணியாற்றும் தன்னார்வலர்களுக்கும், மொழியை அடுத்தத் தலைமுறைக்கு கடத்த என்னும் பெற்றோர்களுக்கும், தாய்மொழியை ஆவலோடு கற்கும் அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்கும், பள்ளி சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி பல.

உலகின் தலை சிறந்த பழமையான தொன் மொழியை, எத்தனையோ காலம் கடந்தும் வற்றாத இளமையுடன் உலகில் வீற்றிருக்க செய்யும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் தலைதாழ்ந்த நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.

நம் முன்னோர் கண்ட கனவின் படி, குன்றின் மேலிட்ட விளக்காய் நம் தாய் மொழியாம் தமிழை ஒளிரச் செய்வதில் உங்களோடு சேர்ந்து நானும் பெருமை கொள்கிறேன்.

இவ்வேளையில் தமிழ்த்தாயின் கையிலிருக்கும் இந்தத் தமிழ் மகளின் தமிழ் வணக்கத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு நீங்களும் விழாவிற்கு வந்து சிறப்பிக்கவும் நன்றி 🙏🙏🙏

“கைகோத்துக் கொண்டே பைந்தமிழோடு நடப்போம்

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்

அடுத்த தலைமுறைக்கான

வெற்றியின் ஏணிப்படிகளாக இருக்கட்டும்“

அன்புடன்,

கவிஞர் மருதயாழினி பிரதீபா

அட்லாண்டா